
வடலூர்: தைப்பூசப் பெருவிழா தொடர்பாக சாதுக்கள் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் 3-02-2025 நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதில் சங்க உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
விழாவின் நான்கு நாட்களிலும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் அன்னதானம் சிறப்பாக நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
வெவ்வேறு இடங்களில் இருந்து வரக்கூடிய சாதுக்களுக்கு சன்மார்க்க சாதனத்திற்கு ஒத்த உணவு வகைகள் வழங்கப்பட வேண்டுமென முடிவுகள் எடுக்கப்பட்டது
தைப்பூச ஜோதி தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், பக்தர்கள் ஏதுமொரு சிரமமும் இல்லாமல் ஜோதி தரிசனம் செய்து திரும்ப போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.